கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பதிவேடுகளுக்கு சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனைப் கருவிகள் இன்மையால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் தட்டுபாடு காரணமாக, அந்த பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவ பரிசோதனைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.