follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமேலும் 4 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்!

மேலும் 4 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்!

Published on

மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று அதிகாலை அகதிகளாக படகு மூலம் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.
மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த தம்பதியினர் தமது 10 வயதான மகள் மற்றும் இரண்டரை வயதான மகனுடன் படகு ஒன்றில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் நான்கு இலங்கை  தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மண்டபம் மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் காரணமாக இலங்கையர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக செல்லும் நிலைமை அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது.

முன்னதாக  மன்னார் மற்றும் வவுனியாவை ஆகிய பகுதிகளை வதிவிடமாக் கொண்டிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் அகதிகளால் கடல் மார்க்கமான தனுஷ்கோடி சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...