கோலாகலமான விழாவுடன் ஆரம்பமான பாராலிம்பிக் : ஆப்கான் கொடியை ஏந்தி வந்த தன்னார்வலர்

1106

தொடக்க விழா நிகழ்வுகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. விழாவின்போது கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றிய பணியாளர்கள் ஜப்பானிய தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியைக் கொடியை தன்னார்வலர் ஒருவர் ஏந்தி வந்தார்.

தொடக்க விழாவில் 714 பேர் பங்கேற்றனர். இவர்களில் 166 பேர் கேட்கும் திறன் குறைபாட்டை கொண்டவர்கள்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் 162 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 4400 வீரர்கள் பங்கேற்கிறார்கள். 22 விளையாட்டுகளில் மொத்தம் 539 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here