follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு‘இது சிரிக்கும் விடயம் அல்ல: நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது’- பசில் குறித்து சனத் ஜயசூர்ய

‘இது சிரிக்கும் விடயம் அல்ல: நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது’- பசில் குறித்து சனத் ஜயசூர்ய

Published on

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விசேட செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

மேலும் இதன்போது, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய, இந்த ஊடக சந்திப்பு குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ‘முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது. நீங்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...