கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் மரணித்தால் அது கொரோனா மரணமாக கருதப்படும் : இந்திய மத்திய அரசு

606

கொரோனா என உறுதி செய்யப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் இறக்க நேரிட்டால் அது கொரோனாவால் ஏற்பட்ட மரணமாக கருதப்படும் என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தற்கொலை ,விஷம் பரவுதல் போன்றவற்றைத் தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாளில் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலோ இறந்துவிட்டால் அதை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரு மனுக்கள் மூலம் புதிய வழிகாட்டல்களை மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here