சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

776

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 157 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இன்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் ஜெலன்ஜர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அபுதாபியில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here