மதுபான ஸ்டிக்கர் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

435

மதுபான போத்தல்களில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கை வழங்குமாறு கலால் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here