மீண்டும் நிச்சயமற்ற நிலையில் களனிதிஸ்ஸ அனல்மின்நிலைய செயற்பாடு

225

‘நாப்தா’ கொள்முதல் செய்ய மின் சார சபையிடம் பணம் இல்லாததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அன்று மதியம் 2300 மெட்ரிக் தொன் ‘நாப்தா’வை வழங்கி அந்த இக்கட்டான சூழ்நிலையினை தவிர்த்தது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டத்திற்கு சுமார் 165 மெகாவாட் உற்பத்தி செய்கிறது.

ஆனால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்பட்ட 2,300 மெற்றிக் தொன் ‘நாப்தா’ மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும், நாளை(17) முதல் களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தின் செயற்பாடு மீண்டும் நிச்சயமற்றதாகவுள்ளது.

கைப் பணத்திற்கு மட்டுமே ‘நாப்தா’ வழங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முடிவு செய்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here