உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது.
இந்த போரால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து இரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் அவர் தற்போது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு உள்ளார். தான் செல்லும் பாதை தெரியாத அளவுக்கு புதினின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இரகசிய ரயில் பயணம் செய்து வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி க்ளெவ் கரகுலேவ் தெரிவித்துள்ளார்.
விமானத்தை விட பாதுகாப்பு அதிகம் என்பதால் சிறப்பு கவச ரயிலில் அவர் பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை 180-க்கும் மேற்பட்ட பயணங்களை அவர் மேற்கொண்டதாக தெரிகிறது. புதின் பல இடங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்களை அமைத்து உள்ளார். தான் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க அவர் பெரும்பாலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார். செல்போனை பயன்படுத்தினால் அவர் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து விடும் என்பதால் புதின் அதனை பயன்படுத்துவது இல்லை.
பல நேரங்களில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொள்கிறார். அவர் எங்கு பயணம் சென்றாலும் அவருடன் பாதுகாவலர்கள், உணவு பரிசோதகர்கள்,மற்றும் என்ஜீனியர்கள் உடன் செல்கிறார்கள். தனக்கு நெருங்கியவர்களுடன் மட்டும் தான் அவ்வப்போது தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
எங்கள் ஜனாதிபதி போர் குற்றவாளியாகி விட்டார். இதனால் பெரும்பாலான நேரத்தை கஜகஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதிகளுடன் பதுங்கு குழியில் செலவிடுதாகவும் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி – christianindex.org