இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் நோபல் பரிசினை பெற உள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.