வரவு செலவுத் திட்டம் நேற்றைய தினம் (13) நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுபானங்களுக்கான விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலை 96 ரூபாவினால்அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலையை 126 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மதுபான போத்தல்களின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- வைன் 750 மில்லிலீற்றர் 14 ரூபாவினால் அதிகரிப்பு
- பியர் 350 மில்லிலீற்றர் (5% குறைவு) 3 ரூபாவினால் அதிகரிப்பு
- 750 மில்லிலீற்றர் (5% அதிகரிப்பு) 14 ரூபாவினால் அதிகரிப்பு