follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉலகம்ஹூதி கிளர்ச்சியாளர்களால் வணிகக் கப்பல் மீது தாக்குதல்

ஹூதி கிளர்ச்சியாளர்களால் வணிகக் கப்பல் மீது தாக்குதல்

Published on

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், கிளர்ச்சியாளர்கள் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு, கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் இறந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், சரக்குக் கப்பலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பணியாளர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என நம்பப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...

பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான உணவு சந்தையில் இன்று (28) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு...

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும்...