86 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து 45,000 செவ்விளநீர் கன்றுகளை நட விவசாய அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் செவ்விள நீருக்கு சர்வதேச சந்தையில் பாரிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் செவ்விளநீரின் மீதான ஏகபோக உரிமை இலங்கைக்கு இருப்பதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின்படி செவ்விளநீர் கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.