சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீன பிரதமர் லி குவாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இருதரப்பு கலந்துரையாடலில் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் ஒத்துழைப்பிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.