follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP2பயணிகள் 173 பேருடன் திடீரென தீப்பிடித்த விமானம்

பயணிகள் 173 பேருடன் திடீரென தீப்பிடித்த விமானம்

Published on

அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து மியாமிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக அதன் பயணம் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீவிபத்துக்குக் காரணமாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை எழுந்தது.

விபத்து நடந்ததும் விமானம் ஓடுபாதையிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு, அதில் பயணித்த 173 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இச் சம்பவத்தில் 6 பயணிகள் சிறிது காயமடைந்தனர் எனவும், ஒருவருக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான சேவையைச் சேர்ந்த போயிங் MAX 8 வகை விமானம்தான் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...

பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான உணவு சந்தையில் இன்று (28) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு...

“ஒரே பாலினத்தினால் எப்படி குழந்தை பெற முடியும்” – கர்தினால்

இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு...