follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP2விராட் கோலி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி - கெயில்

விராட் கோலி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி – கெயில்

Published on

2025ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிண்ணத்தினை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது.

ஐ.பி.எல். தொடர் தொடங்கியது முதல் ஆடி வரும் பெங்களூரு அணி வென்ற முதல் கிண்ணம் இதுதான். ஐ.பி.எல். கிண்ணத்தினை பெங்களூரு அணி வென்றது கண்ணீர் மல்க விராட் கோஹ்லி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ஐ.பி.எல் கிண்ணத்தினை ஆர்.சி.பி மற்றும் நல்ல நண்பர் விராட் கோஹ்லி வென்றதில் மிக்க மகிழ்ச்சி என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் கிண்ணத்தினை வென்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். விராட் கோலிக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 18 ஆண்டுகளாக கிண்ணத்தினை வெல்வதற்காக காத்திருந்தோம். நான் ஏற்கனவே கூறியதைப் போல, காத்திருப்போருக்கு நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

ஐ.பி.எல் கிண்ணத்தினை தூக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஆர்.சி.பி கிண்ணத்தினை வெல்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அணியில் இல்லாவிட்டாலும் ஐ.பி.எல் கிண்ணத்தினை தொடும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவழியாக கிண்ணத்தினை வென்றுவிட்டோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கிண்ணத்தினை வெல்லும் என நம்புகிறேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...

பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான உணவு சந்தையில் இன்று (28) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு...

“ஒரே பாலினத்தினால் எப்படி குழந்தை பெற முடியும்” – கர்தினால்

இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு...