follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு ஜோ பைடன் அழைப்பு!

ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு ஜோ பைடன் அழைப்பு!

Published on

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இரண்டாவது முறையாக இன்று ஆரம்பமானது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் அதே வேளையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போர் தொடுக்க இராணுவ படைகளுக்கு ஆணை பிறப்பித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருப்பதாவது,

ஜனாதிபதி புதின் பேரழிவு விளைவிக்கக்கூடிய மற்றும் மனித இனத்திற்கு துன்பத்தை கொண்டு வரும் திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார்.

உக்ரைன் மக்ளுக்காக ஒட்டுமொத்த உலகமும் பிரார்த்தனை செய்து வருகிறது. அந்நாட்டு மக்கள் ரஷ்ய இராணுவப் படைகளால் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும்.

நான் வெள்ளை மாளிகையில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன். தேசிய பாதுகாப்பு குழுவிடமிருந்து வரும் தகவல்களைப் பெற்று வருகிறேன்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜி7 அமைப்பு தலைவர்களுடன் சந்திப்பு நிகழவுள்ளது. நாங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த தலாய் லாமா தெரிவில் சீனாவிற்கு இடமிருக்காது – 14ம் தலாய் லாமா திட்டவட்டம்

புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது...

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...