கண்டி – மாத்தளை புகையிரத பாதையின் நித்தவெல பிரதேசத்தில் புகையிரத பாதைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை பிரதேசவாசிகள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதே பகுதியில் வசித்து வந்த 35 வயதுடைய பத்தும் கயான் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலத்தில் வெட்டுக்காயம் காணப்பட்டதால் குறித்த நபரைக் கொன்று புகையிரதப் பாதைக்கு அருகில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.