புதிய கல்வியாண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்படும் பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர் இடமாற்றங்களை பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து சிரமம் காரணமாக இணைக்கப்பட்ட ஆசிரியர்கள், கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும், அப்பாடசாலைகளின் அதிபர்களது அனுமதியுடன் டிசம்பர் 31ஆம் திகதி வரை அந்தந்த பாடசாலைகளில் கடமையாற்ற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.