follow the truth

follow the truth

July, 29, 2025
HomeTOP1லொத்தர் சீட்டுகளின் விலை இன்று முதல் இரட்டிப்பு விலையில்

லொத்தர் சீட்டுகளின் விலை இன்று முதல் இரட்டிப்பு விலையில்

Published on

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன இன்று (06) முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை அதிகரித்துள்ளன.

இதன்படி 20 ரூபாவாக இருந்த லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

அதிக விலை நிலவரத்தை தவிர்ப்பதற்காக லொத்தர் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், விலை உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோருக்கு வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

தேசிய லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் மெனுர சதுரங்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;

“ஒவ்வொரு லொத்தரிலும் குறைந்தபட்ச பரிசு ரூ. 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நடுத்தர அளவிலான பரிசுகள் மற்றும் முதல் அடுக்கு பரிசுகளின் அளவு அதிகரித்து அதிக வாடிக்கையாளர்களுக்குச் செல்வதால், அதிக வெற்றியாளர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். ரூ. 40க்கு 40 கோடி ரூபா சூப்பர் பரிசு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். லொத்தர் சீட்டுகள் மூலம் செலுத்தப்படும் தொகை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் பரிசுத் தொகையும் அதிகரித்துள்ளது..”

இதேவேளை, லொத்தர் சீட்டு ஒன்றின் விலை அதிகரிப்பு மற்றும் கமிஷன் தொகையை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை லொத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக லொத்தர் விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிருஷாந்த மரம்பகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், லொத்தர் விலையை அதிகரிப்பதன் மூலம் எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என தேசிய லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் மெனுர சதுரங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

ரயில்கள் நின்றுவிடுமா? 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...

மஹரகம வாகன அலங்கார நிலையத்தில் பாரிய தீ

மஹரகம - பிலியந்தலை வீதியில் உள்ள கொடிகமுவ பகுதியில் அமைந்துள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து...