follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகதிர்காமம் ஆலயத்திலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மாயமானது

கதிர்காமம் ஆலயத்திலிருந்து 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் மாயமானது

Published on

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கதிர்காமம் ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட 38 பவுண் தங்க தட்டு காணாமல் போனமை தொடர்பில் அங்கொட லொக்காவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அங்கொட லொக்காவின் மகனின் தோஷத்தை போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கதிர்காமம் ஆலயத்திற்கு குறித்த தங்க தட்டு காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...