தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பூசன் நகரில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது லீ ஜே மியாங் (Lee Jae-myung) கத்தியால் குத்தப்பட்டார்.
தாக்குதலில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த தாக்குதலை நடத்திய 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட நபரை பொலிசார் கைது செய்தனர்.
கையொப்பம் பெறுவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவரை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2022 ஜனாதிபதித் தேர்தலில் வலுவான பங்கு வகித்த லீ ஜே மியாங் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.