follow the truth

follow the truth

July, 27, 2025
Homeவிளையாட்டுஇலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை அணிக்கு வெற்றி

Published on

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில், Rishad Hossain , Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Jaker Ali 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Mahmudullah 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு வரவுள்ள ஜப்பானிய கிரிக்கெட் அணி

ஜப்பானிய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்குத் தகுதி...

டிம் டேவிட் அதிரடி சதம்: அவுஸ்திரேலியா அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகள் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது....

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன்...