உள்ளூர் பெருந்தோட்ட விவசாயிகளைக் காக்க இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு அரசாங்கம் வரி விதித்தாலும், இடைத்தரகர்களும், வியாபாரிகளும் பலன் அடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு 20 ரூபா வரி விதிக்கப்பட்டதுடன், அதற்கமைய ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விற்பனை விலை 180 முதல் 230 ரூபா வரை காணப்பட்டது.
ஆனால், இவ்வளவு நிவாரணம் கிடைத்தாலும், சந்தையில் தங்களின் வெங்காயத்திற்கு உரிய விலை இன்னும் கிடைக்கவில்லை என பெரிய வெங்காய விவசாயிகள் முறைப்பாட்டினை தெரிவிக்கின்றனர்.