follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

Published on

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தலைமையில், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட தேசிய மட்டத்திலிருந்து மாவட்டம் மட்டம் வரையிலான அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பாரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020 / 0113 668 100 அல்லது 0113 668 013 / 0113 668 010 மற்றும்076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், 2024ஆம் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கடந்த 20ஆம் திகதி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து...

அரசாங்கத்தினை அசௌகரியப்படுத்தவே இந்த வேலைநிறுத்தம் – போக்குவரத்து அமைச்சு

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து...