follow the truth

follow the truth

May, 1, 2025
Homeலைஃப்ஸ்டைல்ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சட்னி..

ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சட்னி..

Published on

பச்சை மிளகாய் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காரமும், கண்ணீரும்தான். பல்வேறு உணவுகளில் காரத்திற்காக குறைவான அளவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாயை வைத்தே ஒரு சட்னி செய்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

தேவையானப் பொருட்கள்:
– 250 கிராம் பச்சை மிளகாய்
– 8 முதல் 10 பல் பூண்டு
– 1 தேக்கரண்டி சீரகம்
– 1 சிட்டிகை மஞ்சள்
– உப்பு தேவைக்கேற்ப
– 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்
– எண்ணெய் தேவைக்கேற்ப
– 2 ஸ்பூன் தேங்காய் அல்லது நிலக்கடலை

செய்முறை:
– பச்சை மிளகாயைக் கழுவி சிறிது நேரம் காய வைக்கவும். காய வைக்கும் முன் அவற்றை கத்தியால் கீறி விடவும்.

– ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, காய வைத்த மிளகாயை போட்டு, நிறம் மாறத் தொடங்கும் வரை வறுக்கவும். பின்னர் சூடான கடாயில் பூண்டு, சீரகம், மஞ்சள் சேர்த்து வறுக்கவும். நன்கு வறுத்தவுட்டன் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.

– கூடுதல் சேவைக்கு தேங்காய் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அதையும் முழுமையாக குளிர வைத்து அதை மிக்சி ஜாருக்கு மாற்றவும்.

– பின்னர் மிளகாய், உப்பு, வினிகர் மற்றும் கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை அதே ஜாரில் போடவும். பின்னர் அதனுடன் உப்பு சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும்.

– இதை காற்றுப்புகாத ஜாடியில் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கூட கெட்டுப்போகாமல் இருக்கும். இதை சாதத்தில் போட்டு நல்லெண்ணய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

– இட்லி, தோசைக்கு இதனை சைடிஷாக வைத்துக்கொள்ள விரும்பினால் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு எள் சேர்த்து தாளித்து அதில் இந்த சட்னியை ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...