கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது.
இது மருத்துவத் துறையில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
அந்த பெண், இருதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இரத்த வகை சோதனை செய்யப்பட்டதில், அவர் ‘O Rh-positive’ வகையைச் சேர்ந்தவர் என ஆரம்பத்தில் கண்டறியப்பட்டது.
உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட ரத்த வகை
மேலும் பரிசோதனைக்காக அவரது இரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச இரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பப்பட்டு, 10 மாதங்களாக நடைபெற்ற ஆய்வுகளின் பின்னர், அவர் கொண்டிருக்கும் இரத்தம் உலகிலேயே இதுவரை கண்டறியப்படாத, தனித்துவமிக்க புதிய வகை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரத்த வகையின் விஷேடதன்மை, அதன் கட்டமைப்பு மற்றும் எதிர்கால மருத்துவப் பயன்கள் தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவ ரீதியாக என்ன அர்த்தம்?
இந்த வகை ரத்தம்:
-
ரத்தத்தொடர்பான சிக்கல்களை தீர்க்க,
-
கோளாறு கொண்ட இரத்த மாற்றங்களுக்கு மாற்றீடாக அமைக்க,
-
எதிர்கால ஜெனெடிக் மற்றும் இம்யூனாலஜி ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு, இந்திய மருத்துவ உலகிற்கு பெரும் பெருமையையும், ஆராய்ச்சி முன்னேற்றத்துக்கும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.