follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP1நிர்ணயிக்கப்பட்ட அரிசி விலைகள் - பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட அரிசி விலைகள் – பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை

Published on

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(07) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டில் நெடுஞ்சாலைத் துறைக்காகவே அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகவும்,அடுத்து நீர்ப்பாசனத் துறைக்கும் விவசாயத் துறைக்குமே அதிக முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாயிகளுக்கே அதிக நிவாரணங்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி அரிசி விலைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நாடு அரிசி ஒரு கிலோ மொத்த விலை 225 ரூபா. சில்லறை விலை 230 ரூபா
வெள்ளை அரிசி மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபா
இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபா
சம்பா அரிசி மொத்த விலை 235 ரூபா. சில்லறை விலை 240 ரூபா
கீறி சம்பா அரிசி மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா

அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.

அதே போன்று அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கோரினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதத்தை விட僅தளமாக உயர்ந்துள்ளதால், இந்த மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை...

அணுசக்தி விபத்துகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பு

அணுசக்தி விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில், நாட்டிற்கு ஏற்படக்கூடிய கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில்,...

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு...