follow the truth

follow the truth

June, 17, 2025
Homeலைஃப்ஸ்டைல்உடலில் விட்டமின் D குறைந்தால் என்ன ஆகும்?

உடலில் விட்டமின் D குறைந்தால் என்ன ஆகும்?

Published on

விட்டமின் D இருந்தால் தான் எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடலில் ஏற்படும் விட்டமின் D குறைபாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்கின்றது. வயதானவர்களுக்கு எலும்பு முறிவு எளிதாக ஏற்படவும் காரணமாகின்றது.

மேலும் இந்த விட்டமின் D குறைபாடானது, விட்டமின் D புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.

விட்டமின் D, டுனா, சார்டைன்ஸ், கார்ட்லிவர் ஆயில், காளான், இறால் போன்ற உணவுப்பொருட்களில் கிடைக்கிறது. பால் பொருட்களான செறிவூட்டப்பட்ட பால், தானியங்கள், ஓட்ஸ் , தயிர் மற்றும் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு பழச்சாற்றில் காணப்படுகின்றது.

வைட்டமி டி குறைபாட்டின் அறிகுறிகள்
அதிகப்படியான உடல் சோர்வு , வேலையில் கவனமின்மை, சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. சாதாரணமாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு உண்டாவது.

மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புத்தேய்மானம் போன்றவை வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறிகளாகும்.

சூரிய ஒளி குறைவான இடங்களில் அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கதிகமான சன் ஸ்க்ரீன் பயன்பாடு மற்றும் அதிகளவு மெலனின் உற்பத்தியுள்ளவர்களுக்கு விட்டமின் D குறைபாடு ஏற்படுகின்றது.

உயரமான கட்டடங்களில் சூரிய ஒளி கிடைக்காத இடங்களில் அதிக நேரம் இருப்பதும் விட்டமின் D குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி – மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால்...

முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இந்த...

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப்...