follow the truth

follow the truth

May, 1, 2025
Homeலைஃப்ஸ்டைல்பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?

பீட்ரூட் ஜூஸ் ‘அதிசய’ பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?

Published on

பிரையன் மேகன்ஸ், நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு செமி-ப்ரோ சைக்கிளிஸ்ட். அதாவது, இவர் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொகொள்வார், ஆனால் முழுநேர தொழில்முறை போட்டியாளர் அல்ல. பீட்ரூட் சாறு, சைக்கிள் பந்தயங்களில் தனது செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது என்று அவர் நம்புகிறார்.

மேலும், தனது மனைவியுடன் இணைந்து நடத்தும் காபி ஷாப்பில், பீட்ரூட் சாறை விற்பனை செய்கிறார்.

பிரையன் மேகன்ஸ்
பிரையன் மேகன்ஸ்

“பீட்ரூட் சாறு நிச்சயமாக அதிசய பானம் அல்ல. இருப்பினும், விளையாட்டு செயல்திறனில் இது ஓரளவு உதவுகிறது என்று நான் நம்புகிறேன். விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே தங்களால் முடிந்தவரை பயிற்சி எடுக்கிறார்கள், வெற்றிபெற அனைத்தையும் செய்கிறார்கள் என நினைக்கிறேன். அப்படியிருக்கையில், இந்த பீட்ருட் சாறை கூடுதல் ஊட்டச்சத்துக்காக குடிப்பதில் தவறில்லை.” என்கிறார் பிரையன் மேகன்ஸ்.

அதனால்தான் நிறைய விளையாட்டு வீரர்கள் பீட்ருட் சாறை பயன்படுத்துகிறார்கள் என்று தான் கருதுவதாக பிரையன் கூறுகிறார்.

செயல்திறனை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள்

ஊட்டச்சத்து நிபுணர்  டாக்டர் சமேஃப்கோ லுடிடி
ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சமேஃப்கோ லுடி

இதுகுறித்துப் பேசிய ஊட்டச்சத்து நிபுணர் சமேஃப்கோ லுடிடி, “இந்தக் கதைக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபுறம், தனிப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இது எப்படி வேலை செய்கிறது? மறுபுறம், அறிவியல் பார்வையில் இருந்து இது எப்படி வேலை செய்கிறது என்ற கேள்வி?” என்கிறார்.

“பீட்ரூட் சாறு பற்றிய எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இது ஒருவரின் செயல்திறனை இயற்கை முறையில் மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் கொண்ட ஒரு பானம் என்பது தான்.” என்றும் கூறுகிறார் லுடிடி.

விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு அணிகளுக்கான பயிற்சி திட்டங்களை தயாரிக்கும் போது, ஊட்டச்சத்து நிபுணர்கள் இப்போது பெரும்பாலும் நைட்ரேட் அளவைக் கருத்தில் கொள்கின்றனர்.

பீட்ரூட் ஜூஸ் குடிக்கும்போது நமது தசைகள் மற்றும் ரத்தத்தின் செயல்திறனில் முன்னேற்றம் உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன.

“அதிலும் இந்த ஆய்வில், விளையாட்டின் தீவிரம் அதிகமானால், ஆக்சிஜன் ஒரு தடையாக இருக்கும் எனும்போது, பீட்ருட் சாறுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதைப் பார்த்தோம். பொழுதுபோக்காக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சீக்கிரமாக மூச்சு வாங்கும். இந்த விஷயத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.”  

“குறிப்பாக சைக்கிள் ஓட்டுதலில், பெரும்பாலும் மிகச் சிறிய வேறுபாடுகள் தான் முக்கியமானவை. அதாவது, இது விநாடிகள் அல்லது மில்லி விநாடிகளின் விஷயமாகக் கூட இருக்கலாம்.”  என லுடிடி கூறுகிறார்.

இதை ஒப்புக்கொள்ளும் பிரையன், “அதனால் தான் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொள்பவர்கள், ஒரு சிறு மாற்றம் கூட மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நம்பி, பயிற்சியில், ஊட்டச்சத்து விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.” என்கிறார்.

“பலரும் இங்கு அதிசய பானங்களை அல்லது மருந்துகளை தேடி அலைகிறார்கள். ஆனால் அப்படி ஏதும் இங்கு இல்லை. ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் குறித்துப் பார்த்தால், இங்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. அதன் அடிப்படை என்பது ஓய்வு, உணவு, உடற்பயிற்சி. அதன் பிறகு தான், செயல்திறனை அதிகரிப்பதற்கான விஷயங்கள் வரும். இந்த கட்டமைப்பின் அடிப்படையில் தவறு உள்ளது என்றால் எந்தப் பயனும் இருக்காது.”

“சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள், பயிற்சி எடுங்கள், போதுமான ஓய்வும் முக்கியம். அதன் பிறகு, செயல்திறனை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும், அது விரத முறையோ, பீட்ரூட் சாறோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி.”

“அதிலும் இந்த ஆய்வில், விளையாட்டின் தீவிரம் அதிகமானால், ஆக்சிஜன் ஒரு தடையாக இருக்கும் எனும்போது, பீட்ருட் சாறுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதைப் பார்த்தோம். பொழுதுபோக்காக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சீக்கிரமாக மூச்சு வாங்கும். இந்த விஷயத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.”

“குறிப்பாக சைக்கிள் ஓட்டுதலில், பெரும்பாலும் மிகச் சிறிய வேறுபாடுகள் தான் முக்கியமானவை. அதாவது, இது விநாடிகள் அல்லது மில்லி விநாடிகளின் விஷயமாகக் கூட இருக்கலாம்.” என லுடிடி தெரிவிக்கிறார்.

இதை ஒப்புக்கொள்ளும் பிரையன், “அதனால் தான் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொள்பவர்கள், ஒரு சிறு மாற்றம் கூட மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நம்பி, பயிற்சியில், ஊட்டச்சத்து விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.” என்கிறார்.

“பலரும் இங்கு அதிசய பானங்களை அல்லது மருந்துகளை தேடி அலைகிறார்கள். ஆனால் அப்படி ஏதும் இங்கு இல்லை. ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் குறித்துப் பார்த்தால், இங்கு ஒரு கட்டமைப்பு உள்ளது. அதன் அடிப்படை என்பது ஓய்வு, உணவு, உடற்பயிற்சி. அதன் பிறகு தான், செயல்திறனை அதிகரிப்பதற்கான விஷயங்கள் வரும். இந்த கட்டமைப்பின் அடிப்படையில் தவறு உள்ளது என்றால் எந்தப் பயனும் இருக்காது.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லுடிடி.

“சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள், பயிற்சி எடுங்கள், போதுமான ஓய்வும் முக்கியம். அதன் பிறகு, செயல்திறனை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும், அது விரத முறையோ, பீட்ரூட் சாறோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி.” என்றும் லுடிடி கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...