follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை

அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை

Published on

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அல்பேனியாவில் கடந்த மாதம் ஒரு பாடசாலையில் 14 வயது மாணவன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவமே இந்த TikTok ஒடுக்குமுறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட TikTok தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கத்தை எதிர்பார்ப்பதாக TikTok கூறியது.

கொலை செய்யப்பட்ட 14 வயது பாடசாலை மாணவனோ அல்லது கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரோ TikTok கணக்குகளை வைத்திருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று TikTok கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...