follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

Published on

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதியளித்தது.

இந்த மனுவை அயேஷானி ஜயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகிய இரண்டு பெண்கள் தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நுவான் போபேகே, ரயில்வே திணைக்களத்தில் தற்போது நிலவும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக அந்த திணைக்களம், ஜூன் மாதம் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறினார்.

கல்வித் தகுதிகளுக்கு கூடுதலாக பிற தகுதிகளின் கீழ் ஆண்கள் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.

இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) இன் கீழ் பிரதிவாதிகளான பெண்களுக்கு சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்காக உள்ள அடிப்படை உரிமை மற்றும் பாலின அடிப்படையில் வித்தியாசமாக நடத்த முடியாது என குறிப்பிட்டு பெண்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

இதன் மூலம் தனது கட்சிக்காரர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடுமாறும், இந்தப் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற குறித்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ள பிரிவை நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.

அதன்படி, இந்த மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் திகதியிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...