follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்..

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்..

Published on

ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் எனவும் அவசரப்பட வேண்டாம் என  விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கல்னேவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதிலும், நெல் விலையிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டால் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்யும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் தங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல் ஆலை உரிமையாளர்கள் சிலர் ஈரமான நெல்லை 85 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நேற்று(30) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நெல் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...