உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர் சில மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து வருகைதந்த பஹலகரகமுனா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகரான அயன் சாந்த போப்பேஆரச்சி என காவல்துறையினர் தெரிவித்தனர்.
T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்திலிருந்து 9 தோட்டாக்களை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவின் தலைவர் படுவத்தே சாமரவின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுவத்தே சாமரவின் உறவினர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
படுவத்தே சாமர, கணேமுல்ல சஞ்சீவவின் எதிர்த் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக அறியப்படுகிறார்.
சம்பந்தப்பட்ட நபருக்குச் சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு துபாயில் உள்ள இஷார என்ற நபரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அவரை உஸ்வெட்டகெய்யாவ பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி அழைப்பின்படி, அவர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு முச்சக்கர வண்டியில் சென்றிருந்தார்.
இறந்தவரின் வீட்டைச் சோதனை செய்தபோது போதைப்பொருள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும் சுட்டுக் கொல்லப்பட்டவர் இதற்கு முன்னர் கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.