இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் தன்னிச்சையான வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மதிய உணவு நேரத்தில் மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பிரதித் தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்த போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்றும் நாலக ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்திருந்தார்.