கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தின் உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சை 10 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
நாடு முழுவதும் 75 பரீட்சை மையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.