follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருகி வரும் புற்றுநோய்

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருகி வரும் புற்றுநோய்

Published on

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெரும, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“நாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோம் என்றால், இலங்கையிலும் உலகிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்க்கான தரவு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது அது உலகிலும் இலங்கையிலும் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயைத் தடுக்க வழிகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நமது மோசமான உணவுப் பழக்கமும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாததும் ஆகும்.

அத்துடன் வயோதிபர்கள் ஆவது. வயதுதான் நோய்க்குக் காரணம் என்பதல்ல. வயதுக்கு ஏற்ப ஆபத்து காரணிகளின் குவிப்பு அதிகரிப்பதால், இந்த நோய் வயதானவர்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது.

இலங்கையில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 ஆண்களும் 1,500 பெண்களும் இந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெங்கு நுளம்பு...

கொம்பனித் தெரு இரவு விடுதி மோதல் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் முதலாம் திகதி...