இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டு சுமார் 10 மாதங்களாகியும் இதுவரைக்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக இன்றைய தினம் 07-02-2025 பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 29ம் கூட்டுத்தாபத்திற்கு வருகை தந்த அமைச்சர் சுனில் ஹெந்துந்தெத்தி அவர்கள் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இருந்து ஊதியம் வழங்குவதாக தெரிவித்திருந்தும் இதுவரை எந்த வித ஊதியமும் கிடைக்காததால் இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.