சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இன்று நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்திற்கான செய்தியை இன்று அனுப்பிவைக்கும் போதே பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இது நாம் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பெண்ணியத்திற்கு எதிரான சித்தாந்தங்களை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டிய நேரம் இது.”
“பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் அரசியல் புறக்கணிப்பு ஆகியவை கிராமப்புற சமூகங்களில் உள்ள பெண்கள், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்கள், தோட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர் துறையில் உள்ள பெண்கள் போன்ற பல்வேறு சமூகக் குழுக்களை விகிதாசாரத்தில் பாதிக்கின்றன.”
இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பிரதமரின் செய்தி, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, கடந்த, நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்காக செயல்படுவோம், நீண்ட கால மாற்றத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம் என்பதை காட்டுகிறது.