சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி, 2025 வரவு செலவுத் திட்ட குழு அமர்வு விவாதத்தின் பத்தாவது நாள் இன்று, கல்வி அமைச்சின் செலவின தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கி மார்ச் 21 ஆம் திகதி வரை 19 நாட்கள் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.