இலங்கையின் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
பிரித்தானியாவிடமிருந்து இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1815ஆம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டு, நாட்டின் இறையாண்மை பிரித்தானியர்களிடம் மாற்றப்பட்டது.
அதன்பின், பிரித்தானிய மன்னரால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் நாடு ஆளப்பட்டது.
இந்நிலையில், 1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி, இலங்கை சோல்பரி அரசியலமைப்பிலிருந்து விடுபட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.
1972இல், அப்போதைய ஶ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்திலிருந்து நீக்கி, மே 22ஆம் திகதி சுதந்திர குடியரசாகப் பிரகடனப்படுத்தியது.
அதன்படி, பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கை முழு சுதந்திரம் பெற்ற இந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுவதுடன், இது நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.