follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்த கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்த கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

Published on

மத்திய கிழக்கில் பதற்றநிலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. ஈரான் மீது ஒபரேஷன் ரைசிங் லயன் (operation rising lion) என்ற பெயரில் கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல்களில் அமெரிக்காவும் இணைந்து கொண்டதையடுத்து இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்தவும், ஈரானை தொடாதே, ட்ரம்ப் ஒரு போர் குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரானுடன் மோதலை தொடங்கிய மற்றும் காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி இஸ்ரேலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் வெள்ளை மாளிகைக்கு அருகிலும் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்புக்காக காவல்துறையினர் பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...