சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று (10) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இலங்கைக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் தலா 3 போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள், ரி20 தொடர்களில் ஆடுகிறது. டெஸ்ட் (1-0) மற்றும் ஒருநாள் (2-1) தொடர்களை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் இறுதியாக ரி20 தொடர் இன்று ஆரம்பமாகிறது.