follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் பலி

Published on

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷ்ய தாக்குதலில் டினிப்ரோவில் ஏழு பேரும், சமரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான வுனுகோவோ மற்றும் ஷெரெமெட்டியோவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து வந்த 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவியை மேலும் நாடியுள்ளார்.

நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...