follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP1மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

Published on

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று...

இலங்கையின் தேயிலை இறக்குமதியை மேம்படுத்த ஈரான் தயார்

மத்திய கிழக்கு நெருக்கடியை தொடர்ந்து இலங்கையுடனான வர்த்தக உறவுகளை, விசேடமாக தேயிலை இறக்குமதியை மேம்படுத்த தயாராக இருப்பதாக ஈரான்...

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு...