follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

Published on

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் (MSMEs) பரேட் சட்டத்தின் செயல்பாட்டால் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளாகப்போகின்றனர். இந்தச் சட்டத்தின் கீழ், கடன் நிலுவை காரணமாக இன்று முதல் அவர்களது சொத்துக்கள் ஏலம் விடப்படும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.

அதனால், அரசாங்கம் உடனடியாக பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, MSME தரப்பினருக்கு கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் மற்றும் பிற நிவாரணங்களை வழங்கவேண்டும் என சஜித் வலியுறுத்தினார்.

இவ்வாறான சூழலில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும் இந்தத் தொழில்முனைவோர் தரப்பின் பங்களிப்பு கணிசமாகக் குறையும் அபாயம் நிலவுவதாகவும், இதன் விளைவாக நாட்டில் சுமார் 4 மில்லியன் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், முந்தைய அரசாங்கத்தைப் போலவே, தற்போதைய அரசாங்கமும் பொய்கள், தேர்தல் நோக்கிய வாக்குறுதிகள் மூலம் இந்தத் தரப்பினரை ஏமாற்றிவருவதாகவும், நீடித்த தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கம் இந்த பிரச்சினையிலிருந்து விலக முடியாது எனவும், MSME தொழில்முனைவோர்களுக்கு முறையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...