அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (30) நடைபெற்ற அமர்வின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்;
“அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் பலவிதமான நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசு சேவையின் மீது அரசாங்கத்திற்கு நம்பிக்கையே இல்லை. இதனால் தான் பாதுகாப்பு அமைச்சும், நிதி அமைச்சும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன”
“உரம் கிடைக்காததாலேயே விவசாயிகள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இதைப் பற்றிய அரசியல் மூத்த தலைவர்கள் பேச தயங்குகிறார்கள்”
வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கான தெளிவான திட்டம் ஒன்றும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், “வரவு–செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல முன்மொழிவுகளுக்கு எந்த திட்டமிடலும் செயல் திட்டமும் இல்லை என்பதை இன்று நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.. அரசியல் நிகழ்ச்சிகளில் இருந்துகொண்டு கைதுகளை நடத்தும் அரசியல் பழிவாங்கல் நடத்தப்படக்கூடாது” எனவும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார். என அவர் சுட்டிக்காட்டினார்.