follow the truth

follow the truth

August, 24, 2025
Homeலைஃப்ஸ்டைல்"நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு" – மோனிகாவின் பாடல் வெற்றிக்கு Sandy-யின் பாராட்டு பதிவு

“நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு” – மோனிகாவின் பாடல் வெற்றிக்கு Sandy-யின் பாராட்டு பதிவு

Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகிறது.

இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் போட்டிருப்பார். இப்பாடலை விஷ்ணு ஏதவன் எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர். இவருடன் அசல் கோலார் RAP செய்துள்ளார்.

பாடலில் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலிற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதற்கு வாய்ப்பு கொடுத்த அனைவரையும் குறிப்பிட்டு அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் சாண்டி மாஸ்டரும் சௌபின் சாஹிரும் இணைந்து மோனிகா பாடலை பார்க்கின்றனர். சாண்டி மாஸ்டருக்கு சௌபின் அரவணைத்து முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஓட்ஸ் வடை

ஓட்சில் இரும்பு சத்து, மெக்னீஷியம் உட்பட பல விதமான புரத சத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். உடல் எடையை...

இரவில் வேலை… பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் சிக்கல்கள்!

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற...

எடை குறைப்புக்கு ஏற்ற உணவு முறை இதுதான்

குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நன்மை பயக்கும் கருவியாக இருக்கும்...