காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும்.
மேலும் உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்கவும் வழிவகை செய்யும்.
காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும்.
இளநீரை அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அதில் சோடியம் அதிகமாக இருப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.