2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் ரூ.125 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
வைத்தியர்களின் வெளியேற்றமானது, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார உட்கட்டமைப்பை சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.